இச்சந்திப்பின் போது, கம்பம் ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார். இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார். அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செந்தில் தொண்டமான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்: 1. OCI வீசாவை (Overseas Citizen of India) பெறுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த பலரால் அதனைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, பெருந்தோட்ட மக்களுக்காக விசேட சலுகை வழங்கி, OCI அட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.