அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பது, கத்தோலிக்க மத ஆசிரியர்களாகக் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்தந்தையர்களை நியமிக்கும் பொறிமுறையை ஆராய்வது குறித்துக் கல்வி அமைச்சுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. அனைத்து மாணவர்களும் தத்தமது மதத்தைக் கற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே தமது முதன்மை நோக்கம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. ஆண்டுக்கு மூன்று முறை இத்தகைய சந்திப்புகளை நடத்துவதற்கு வழியேற்படுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்குப் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நன்றி தெரிவித்தார். அத்துடன், 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்தால் கடல் எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பில் கத்தோலிக்கச் சபை சார்பில் அருட்தந்தையர்கள் ஹெரால்ட் ஆண்டனி பெரேரா, விமல் சிறி ஜயசூரிய, மெக்ஸ்வெல் சில்வா ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலிகா பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.