பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து என்ன பயன்?
7 ஆகஸ்ட், 2026 அன்று 11:12 PM
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரிடம் இந்த கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, 1990 செப்டம்பர் மாதம் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் வழங்க வேண்டும்.
2026 மார்ச் 20 ஆம் திகதியிட்ட இலங்கைப் பொலிஸ் அறிவித்தலின் பிரகாரம், 2026ஃ03ஃ20 என்ற இலக்கக் குறிப்பின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள நபர் ஒருவர் 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு, புதிய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தின் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள கொலை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் நான் அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை கேட்கின்றேன். முதலாவது, 2026ஃ03ஃ20 இலக்கக் குறிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையின் தற்போதைய நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? விசாரணையின் மூலம் எந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன? எத்தனை சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்? சந்தேகநபர்கள் யாரேனும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா? அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அல்லது விசாரணைச் சுருக்கம் சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதா? அது தொடர்பில் ஏதேனும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளனவா?
முழுச் செய்தியை ஆதார இணைப்பில் வாசிக்கவும்.