யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் வரும் காட்சிகள் தான். இந்த படத்திற்கு தற்போது சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் டாக்சிக் படம் தொடர்பாக கன்னட நடிகை ரிஷிகா சிங் என்பவர் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.