இலங்கை கடற்படையினரும் நுரைச்சோலை பொலிஸாரும் இணைந்து, 2026 ஆகஸ்ட் 13 அன்று நுரைச்சோலை, பனிஅடிய பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் 'விஜய' கடற்படைக் கப்பல் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் சோதனையிடப்பட்டது. அதில் 38 மூடைகளில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த 1,464 கிலோவிற்கும் அதிக எடையுள்ள பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மற்றும் லொறி ஆகியவற்றை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.