இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கான அடுத்த 24 மணித்தியால வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 15 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். இதன் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.