பேரிடர் கால அவசர தகவல்களை வழங்க '117' என்ற அவசர உதவி எண் அறிமுகம்
13 ஆகஸ்ட், 2026 அன்று 10:16 PM
அவசர அனர்த்தங்கள் குறித்த விபரங்களை பகிர்வதற்காக 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

அவசர பேரிடர் நிலைமைகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்காக '117' என்ற புதிய அவசர அழைப்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணை தொடர்புகொண்டு தகவல்களை வழங்குவதன் மூலம், ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்க முடியும்.
இதன் மூலமாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை விரைவாக ஒருங்கிணைத்து, ஆபத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்க இயலும் என்றும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, தற்போதைய கனமழை போன்ற அனர்த்த காலங்களில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவசர உதவிகளை ஒருங்கிணைப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த 117 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.