இலங்கை கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நாட்டின் கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் எத்தகைய ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார். இக்கலந்துரையாடலில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்னவுடன், அதன் உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி மற்றும் டினால் பிலிப் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.