நாட்டைச் சூழ்ந்துள்ள கடல் பிராந்தியங்களுக்கான அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கை, 2026 ஆகஸ்ட் 07 அன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிலாபத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். இதன் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரித்து, மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை பலமாக வீசுவதற்கு சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.