முல்லைத்தீவில் பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன தலைமையில் விசேட கலந்துரையாடல்
15 ஆகஸ்ட், 2026 அன்று 10:53 PM
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன தலைமையில் மாவட்டத்தின் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 13ஆம் தேதி காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.ஜெயக்காந் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்கள் புனரமைப்பு, கால்வாய்கள் திருத்தம் மற்றும் அணைக்கட்டு வேலைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், விவசாய விரிவாக்கத்திற்குத் தேவையான காணிகள் குறித்தும், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் விசேடமாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், பொறியியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.